குறைதீர்க்கும் கூட்டத்தில் 112 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, பிப்.4:கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் 112 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர், தொழில் கடன், கல்விக்கடன், காவல்துறை நடவடிக்கை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 112 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

Related Stories:

>