5வது பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய போலீசார் அறிவுரை

ஈரோடு, பிப்.4:ஈரோடு மாவட்டம் பவானி செங்காடு ராணா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30). பெயிண்டர். இவரது மனைவி சுமித்ரா (26). இவர்களுக்கு 2 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமித்ரா 5வது முறையாக கருவுற்று, கடந்த 29ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் 5 ஆவதாக பெண் குழந்தையை பெற்றார். இதையடுத்து, சுமித்ராவை மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்யுமாறு கூறினர். ஆனால், சுமித்ராவும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று சுமித்ராவிடம் விசாரணை நடத்தி, குடும்ப கட்டுப்பாடு செய்வது குறித்து கவுன்சிலிங் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுமித்ராவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் அனைத்தும் அவரிடம் தான் உள்ளதா? என எழுந்த சந்தேகத்தின் பேரில், நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டோம். குழந்தைகள் அனைத்தும் அவரது வீட்டில் தான் இருந்தது. இதைத்தொடர்ந்து 5வது முறையாக பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதற்கு மேல் அவர் கருவுற்றால் அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த சோர்வடைய வாய்ப்புள்ளது. கவுன்சிலிங் அளித்ததன் பேரில், அவரும், அவரது குடும்பத்தினரும் குடும்ப கட்டுப்பாடு செய்ய ஒப்புக்கொண்டனர்’ என்றனர்.

Related Stories:

>