×

நஞ்சை ஊத்துக்குளி அருகே பாறைக்குழிக்கு தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

மொடக்குறிச்சி, பிப்.4: நஞ்சை ஊத்துக்குளி அருகே மெயின்ரோட்டை ஒட்டி உள்ள பாறைக்குழிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, 19 ரோட்டில் ஆலுச்சாம்பாளையம் உள்ளது. இந்த ரோடு ஈரோடு - முத்தூர் ரோட்டுக்கு மாற்றாக உள்ளது. முத்தூர் செல்லும் ரோட்டில் மறியல் மற்றும் பழுது ஏற்பட்டால் இந்த 19 ரோட்டைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஈரோடு நகரை ஒட்டியுள்ள 46 புதூர், லக்காபுரம் முத்துக்கவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு குடியிருப்பு உள்ளது. இதனால், 19 ரோட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஆலுச்சாம்பாளையம் பகுதியில் மெயின்ரோட்டை ஒட்டி ஆழமான பாறைக்குழி உள்ளது.இந்த பாறைக்குழிக்கு இதுவரை தடுப்பு வேலி அமைக்க வில்லை. ரோடு பகுதியில் இந்த பாறைக்குழி உள்ளதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்தக் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, பிரதான ரோட்டில் உள்ள பாறைக்குழிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : rock pit ,poison blower ,
× RELATED புதுப்பாளையம் பாறைக்குழியில் விடிய, விடிய எரிந்த தீ