×

தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு வைகோ கடிதம்

சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளின் அயல் உறவுத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும். ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும்.

பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து சிறப்பு ஆணையர் ஒருவரைத் தெரிவு செய்து இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். அதேபோல், அந்த ஆணையர் இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும். இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Eelam ,Vaiko ,UN Human Rights Commission ,
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...