பாழடைந்த விவசாய கிணறுகளில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி வெண்குடி கிராமத்தில் விவசாயத்துக்கு பயன்படாத கிணறு உள்ளது. நேற்று காலை இந்த கிணற்று பகுதியை ஒட்டி சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கிணற்றில் பெண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதேபோல் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலை பாலாற்று படுகையை ஒட்டி அமைந்துள்ள பாழடைந்த விவசாய கிணற்றில், நேற்று காலை கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள், அங்கு சென்று பார்த்தபோது, கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்தது.

இதையடுத்து வாலாஜாபாத் போலீசார், அங்கு சென்று, அந்த சடலத்தையும் கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடா்ந்து போலீசார், மேற்கண்ட சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், கொலை செய்து வீசப்பட்டார்களா, தற்கொலையா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். பெரும்புதூர்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜினி (32). பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த செல்லம்பட்டிடை கிராமத்தில் செயல்படும் தனியார் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஜினி, அதே கிராமத்தில் உள்ள குட்டையின் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், குட்டையில் இறங்கி குளித்தார். இந்தநேரத்தில் போதையில் இருந்த அவர், நீந்த முடியாமால் தண்ணீரி மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து, சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>