சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
