×

குளத்தூர் கல்லூரி சார்பில் வீரபாண்டியபுரத்தில் பொது மருத்துவ முகாம்

குளத்தூர், பிப். 3: குளத்தூர் மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி சார்பில் குளத்தூர் அருகே வீரபாண்டியபுரத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது. தலைமை வகித்த கல்லூரி தலைவர் தாமஸ், முகாமை துவக்கிவைத்தார். வீரபாண்டியபுரம் ஊராட்சி தலைவி லெக்கம்மாள் மாணிக்கம், தூத்துக்குடி வெற்றி அகாடமி இயக்குநர் கதிரேசபாண்டியன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார்.

இயக்குநர் கோபால் பொது மருத்துவ சிகிச்சைகள் குறித்துப் பேசினார். கண்ணா மருத்துவமனை மருத்துவர் பச்சைமால் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதோடு பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கினர்.  முகாமில் முள்ளூர், முத்துராமலிங்கபுரம், த.சுப்பையபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாகப் பங்கேற்றனர். இளைஞர் செஞ்சிலுவை சங்கப் பொறுப்பாளர் சத்யகுணா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடு மற்றும் கிராம மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை கல்லூரி நிர்வாகத்தினரும், பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

Tags : Medical Camp ,Kulathur College ,
× RELATED கால்நடை மருத்துவ முகாம்