×

சாயர்புரம் சேகர மன்ற கூட்டத்தில் வெல்டன் கிளப் நிர்வாகிகள் தேர்வு

ஏரல், பிப். 3:  சாயர்புரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகர மன்ற கூட்டம் சேகர தலைவர் டேவிட்ராஜ் தலைமையில் நடந்தது. திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிசந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தூய ரபயேல் மருத்துவமனையில் புதிய நர்சிங் கல்லூரி துவங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சாயர்புரம் வெல்டன் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 தலைவராக டேவிட்ராஜ், துணைத்தலைவராக ஸ்டார்லின், செயலாளராக எபனேசர், துணைச் செயலாளர்களாக அருண்குமார், ஜான்ஜெசுரன், டேவிட் தருமநாதன், ஜான்சன், பொருளாளராக ஆண்ட்ரூஸ் அதிசயராஜ், துணை பொருளாளராக டேனியல் பிளஸ்ஸோ, ஆலோசகர்களாக ஆசீர் ரத்தினதாஸ், ஆனந்தவேதா, மங்களராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.

மாலை நடந்த நிகழ்ச்சிக்கு திருமண்டல செயற்குழு உறுப்பினரும், சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரித் தாளாளருமான ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகித்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள், வாலிபால் கமிட்டி, கிரிக்கெட் கமிட்டி, பேட்மிட்டன் கமிட்டி, கேரம் மற்றும் சேஸ் கமிட்டி உறுப்பினர்கள் என 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிகளில் சாயர்புரம் சேகர மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Welton Club ,executives ,meeting ,Sayarpuram Collectorate ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது