×

தமிழக காங். சிறுபான்மை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளராக தேவதாஸ் நியமனம்

நெல்லை, பிப். 3: தமிழக காங். சிறுபான்மை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளராக தேவதாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிறுபான்மை பிரிவு தலைவர் நதீம் ஜாவித் ஆகியோர் உத்தரவின் பேரில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம்பாஷா ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். மாநில இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள தேவதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜேஷ்முருகன், லெனின்பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu Cong ,State Co-ordinator ,
× RELATED நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும்...