×

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

நெல்லை, பிப். 3:  பாளை ஜான்ஸ் கல்வியியல் வளாகத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநெறி இயக்ககத்தின் மூலம் பிஎட்(டிடிஇ) பட்டப்படிப்பை 2018-20 பேட்சில் முடித்த தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்கள் 58 பேருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் ஸ்கார்ப் புக் என்ற கையேட்டை பல்கலை. ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட, கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், இணை மைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பாராட்டப் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை 2ம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் சதீஷ், மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். பாலின் ஜோன்ஸ் நன்றி கூறினார்.

Tags : Commendation ceremony ,teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...