×

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துக்கு வரவேற்பு

சேலம், பிப். 3: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2019ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக,  தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பதை, பட்டதாரி ஆசிரியர் கழகம் முழுமனதுடன் வரவேற்கிறது. அதேசமயம், போராட்ட காலத்தில் பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்குவதுடன், சரண்டர், டிஏ போன்ற நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கவும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.   

Tags : cancellation ,teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...