×

திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபிசில் வினாடி வினா போட்டி

திருச்செங்கோடு, பிப்.3: தமிழக அரசு சார்பில், 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்செங்கோடு, ஆர்டிஓ அலுவலகத்தில் பழகுனர் உரிமம்  மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற வந்த விண்ணப்பதாரர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார  போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.மோட்டார் வாகன  ஆய்வாளர்கள் செந்தில்குமார், குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து வினாடி வினா போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் பரிசு வழங்கினார்.

Tags : RDO Office ,Tiruchengode ,
× RELATED எவர்கிரீன் கராத்தே பள்ளி குழந்தைகள் முதலிடம்