நாமக்கல்லில் திமுக வழக்கறிஞர் அணி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல், பிப்.3: நாமக்கல்லில்,மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைகூட்டம்  மேற்கு மாவட்ட அமைப்பாளர் தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.கிழக்கு மாவட்ட  அமைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். இதில், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் சட்டமன்ற தேர்தலில் வழக்கிறஞர்களின் பணி குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில்,மாவட்ட பொருளாளர் செல்வம், சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், துணை அமைப்பாளர்கள் கணபதி, தமிழரசு, பொன் சந்திரசேகர், செல்வராஜ், சுகுமார், ஆனந்த் பாபு, ராஜேந்திரன், கலைமணி, பாலகிருஷ்ணன், சரவணகுமார், பொன்னம்பலம், செந்தில்குமார் நடராஜன், பார்கவுன்சில் உறுப்பினர் அய்யாவு,மற்றும் தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர்கள் காவல் நிலைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>