×

தமுமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.3:கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தமுமுக சார்பில், நபிகள் நாயகம் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நூர்முகமது தலைமை வகித்தார். டவுன் கமிட்டி தலைவர் இர்பானுல்லா, காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்ரமணி, வர்த்தக பிரிவு முபாரக், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அன்வர், சாதிக்பாஷா, தலைமை கழக பேச்சாளர் நவ்ஷாத், ரபீக், தமுமுக நகர பொறுப்பாளர் அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Tags : Tamumuka ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்