×

எஸ்.பி.வேலுமணி மைத்துனருக்கு சீட்‘தாமரை’ எதிர்ப்பு

 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றாக கிணத்துக்கடவு தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.தமோதரன் எம்எல்ஏவாக உள்ளார். வருகின்ற தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியை குறி வைத்து பாஜ வேலைகளை செய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளை கேட்கும் பாஜவிற்கு, 2 சீட்களுக்கு மேல் ஒதுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கறார் காட்டுகிறார். ஆனால் 3 தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும் என்ற முனைப்போடு பாஜ டெல்லி தலைமை மூலம் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் அழுத்தம் தந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கிணத்துக்கடவு தொகுதியை பெற வேண்டும் என பாஜ முன்னாள் புறநகர் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். கிணத்துக்கடவு தொகுதி தே.ஜ. கூட்டணி வேட்பாளர் வசந்தராஜன் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், தொகுதி பங்கீட்டிற்கு முன்பாகவே கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது அப்பகுதி அதிமுகவினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட முன்னாள் அமைச்சர் செ.தமோதரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இத்தொகுதியில் போட்டியிட சீட் பெற வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முக ராஜா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கியது போல சித்தரிக்க முயற்சித்து வருவதற்கு, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜவுக்கு ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்பதால், கட்சிக்காக உழைப்பவர்களுக்கே இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுகவினர் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags : S.P. Velumani ,Lomharai ,Kinathukadavu ,Coimbatore district ,Former minister ,S. Damodaran ,AIADMK ,MLA ,BJP ,Coimbatore… ,
× RELATED “குக்கர் சின்னத்தில்தான் போட்டி,பாஜக...