×

தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி 3 பேர் பலி

சென்னை: சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் சிக்னல் பகுதியில் சாலை தடுப்பில் ஆட்டோ மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். முன்னால் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சாலை தடுப்பில் ஆட்டோ மோதியது. விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கடலூர் ஐசக்ராஜ், உத்திரமேரூர் சுந்தரராஜன், புதுச்சேரி நாகமுத்து இறந்தனர். படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளர்கள் ஏழுமலை, ஆனந்த்குமார் உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவை வேகமாக ஓட்டியதுடன் 3 பேர் இறப்புக்கு காரணமான ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்….

The post தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,CHENNAI ,Iruvanliyur ,Tambaram, Chennai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...