×

ஓசூரில் அண்ணா நினைவு நாள்

ஓசூர், ஜன.3:சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓசூரில் இன்று அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை 9 மணியளவில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர் ராம் நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, வட்ட, கிளை அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Anna Memorial Day ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ