×

அண்ணா நினைவு நாள்

தர்மபுரி, பிப்.3: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அறிவுலக ஆசான், பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு நாளான இன்று (3ம் தேதி) காலை 9 மணிக்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. முன்னதாக காலை 8.30 மணிக்கு, தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகிலிருந்து எனது தலைமையில் அமைதி பேரணியாக புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக தர்மபுரி நான்குரோடு வழி சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. எனவே மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anna Memorial Day ,
× RELATED அறிஞர் அண்ணா நினைவு தினம் ரங்கநாத...