×

டிஎன்சி சிட்ஸ் குரூப் நிறுவன திருமண வரவேற்பு விழா

காரிமங்கலம், பிப்.3: தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் மகன் பிரவீன், டிஎன்சி சிட்ஸ்(பி) லிட். நிர்வாக இயக்குனரும், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான இளங்கோவன் மகள் சினேகா ஆகியோரது திருமணம் கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்தது. இதைத்தொடர்ந்து சேலம் ஐந்து ரோடு ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி -கல்லூரி தாளாளர்கள், தொழிலதிபர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், அரிமா -ரோட்டரி சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை மணிவண்ணன், இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர்கள், டிஎன்சி சிட்ஸ் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர். ...

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா