காவேரி மருத்துவமனை ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்

திருச்சி,பிப்.3: காவேரி மருத்துவமனை கோவிட் தடுப்பூசி மையத்தினை தென்னூரில் துவங்கியது. தடுப்பூசி மையத்தினை காவேரி மருத்துவ குழுமத்தின் இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் துவக்கிவைத்தார். கன்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் முதல் தடுப்பூசியையும், தென்னூர் காவேரி மருத்துவமனையின் பெசிலிடி இயக்குனர் அன்புச்செழியன் 2வது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது காவேரி மருத்துவ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் கூறுகையில், இந்த தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம் ஆகும் இந்தியா இந்த தடுப்பூசியின் மீது முதன்மையான நம்பிக்கை வைத்துள்ளது. எனினும் இந்த தடுப்பூசியை இந்தியா முழுவதும் பயன்படுத்த செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். காவேரி மருத்துவமனை தனது 2500 மருத்துவ ஊழியர்களுக்கான தடுப்பூசியை அரசிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் தென்னூர் காவேரி மருத்துவமனை இதுவரை 2300க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த தடுப்பூசியை காவேரி மருத்துவமனையின் ஊழியர்களும், மருத்துவர்களும் போட்டுக்கொண்டனர்.

Related Stories:

>