பொதுமக்கள் அவதி க்ரைம் செய்திகள் மத்திய சிறை வளாகத்தில் பயிற்சி முடித்த சிறை காவலர்கள் அணிவகுப்பு

திருச்சி, பிப். 3: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் 176 ஆண் காவலர்கள், 21 பெண் காவலர்கள் என மொத்தம் 197 சிறைக்காவலர்களுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 6 மாதம் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நேற்று மாலை சிறை வளாகத்தில் நடந்தது. இதில் சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் டிஜிபி சுனில்குமார் சிங் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். மேலும் பயிற்சியின் போது, சிறப்பாக பயிற்சி முடித்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார். முன்னதாக சிறை டிஐஜி கனகராஜ் வரவேற்று பேசினார். விழாவில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன், சரக டிஐஜி ஆனிவிஜயா, சிறப்பு காவல்படை முதலணிஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறை சூப்பிரண்டு சங்கர் நன்றி கூறினார்.

Related Stories:

>