அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தர்ணா

திருவாரூர், பிப்.3: குடும்ப நல நிதியினை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கக் கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பநல நிதியினை ரூ 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், 9 மாத காலமாக வழங்கப்படாத குடும்ப நல நிதியினை உடனே வழங்கிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று புதிய ரயில் நிலையம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சந்திரசேகரன், செயலாளர் முனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>