×

சங்கேந்தி, எடையூர் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு சாலையில் தண்ணீர் வழிந்தோடும் அவலம்


திருத்துறைப்பூண்டி, பிப்.3: திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த ஒருமாதமாக பல கிராமகளில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வந்துவிட்டால் இதைவிட அதிகமாக குடிநீர் பிரச்னை இருக்கும். இந்நிலையில் பல இடங்களில் குடிநீர் சாலையில் ஒடுகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் மற்றும் சங்கேந்தி வழியாக முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டைக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் பைப்லைனில் எடையூர் சொசைட்டி, எடையூர்- ஆலாங்குளம் மற்றும் சங்கேந்தி பஸ்டாண்ட் பகுதிகளில் சாலையில் மெயின் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் கடைத்தெருவில் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் சாலை எந்த நேரமும் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே குடிநீர் பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Sankendi ,Edayur ,areas ,Kollidam ,road ,
× RELATED எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி