×

விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


திருவாரூர், பிப்.3:  கட்டுமானத்திற்கு தேவையான கம்பி, மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட தளவாட பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்திட வேண்டும், கட்டுமான பொருட்களுக்கென விலை நிர்ணயக் குழு அமைத்திட வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையவழி சேர்ப்பு மற்றும் புதுப்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும், கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்திட வேண்டும், மணல் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறியாளர் கவுன்சில் அமைத்திட வேண்டும், பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்திட வேண்டும், நிலத்தரகர்களுக்கு என நல வாரியம் அமைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பினர் திருவாரூரில் நேற்று தாலுக்கா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் செந்தில் அரசன் மற்றும் தொழிற் சங்க பொறுப்பாளர்கள் பிரபாகரன், சுந்தரமூர்த்தி வசந்தகுமார் சந்தானகிருஷ்ணன், நடராஜன், விஜயராகவன், சிங்காரவேலு கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Construction workers ,federation ,
× RELATED மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 தொழிலாளர்கள் பரிதாப பலி