×

கலெக்டர் வேண்டுகோள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது

திருவாரூர், பிப்.3: திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 113 பேர்களை போலீசார் கைது செய்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 18 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் ஆதிசேஷையா கமிட்டியினை ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையிலும், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், வேளாண்மை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னையன், கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் மகாலிங்கம், சசிகலா, தமிழ்ச்சுடர், ராஜலட்சுமி உட்பட 113 பேர்கள் தாலுகா போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : rioting ,
× RELATED எம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி பேரம்...