முன்னறிவிப்பு இல்லாமல் கூரை வீடுகள் இடிப்பு தாலுகா அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை

பாபநாசம், பிப். 3: பாபநாசம் அருகே விழுதியூர் ஊராட்சி சாலை தெருவில் மெயின் ரோட்டோரம் இருந்த 5 கூரை வீடுகளை மட்டும் முன் அறிவிப்பின்றி கடந்த 29ம் தேதி நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறை, காவல் துறை உதவியோடு அகற்றியது. இதை கண்டித்து 5 வீடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பாபநாசம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில், விவசாயிகள் சங்க மாநிலக்குழு சாமு, தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>