×

ராஜகிரியில் கடைகள் அடைப்பு

பாபநாசம், பிப். 3: நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாபநாசம் அடுத்த ராஜகிரியில் மெயின்ரோடு, சவுக்கத்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மெடிக்கல் ஷாப், மளிகை கடை, டீக் கடை, ஹார்டுவேர்ஸ், பேன்சி ஸ்டோர், துணி கடை உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த ராஜகிரியில் மதம், சாதி கடந்து இந்த கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து 100 சதவீத கடையடைப்பு நடைபெற்றது.

Tags : Shops ,Rajagiri ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி