×

பாஜக நிர்வாகியை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒரத்தநாடு, பிப்.3: நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமனை கண்டித்து ஒரத்தநாடு, முஸ்லிம் தெரு பள்ளிவாசல் அருகில், பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர். பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஹனீப்ரப்பானி துவக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பீர்முஹம்மது, ஹாமீம் இஸ்மாயில், மதுக்கூர் பவாஸ், பேராவூரணி சலாம், முஹம்மது, முஹம்மதுயஹ்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : Islamists ,BJP ,executive ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...