×

உலக ஈர நில நாள் ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

தஞ்சை, பிப்.3: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 2ம் தேதி “உலக ஈர நில நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தஞ்சை மாவட்ட வனத்துறை சார்பில், இந்தாண்டு, உலக ஈர நில நாள் விழாவை முன்னிட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஈர நிலம் தொடர்பான புரிதலை மேம்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், நேற்று உலக ஈர நில நாள் விழாவில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, வன விலங்கு உயிரியலாளர் ராம் மனோகர், அருகனூயிர் அறக்கட்டளையின் தலைவர் சதீஷ் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர், ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட வன அலுவலர் இளையராஜா பரிசுகளை வழங்கினார். விழாவில், தஞ்சாவூர் மாவட்ட வன விரிவாக்க மைய அலுவலர் வடிவேல் , தஞ்சாவூர் வனச்சரக அலுவலர் ஜோதிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : winners ,World Wetlands Day Painting Competition ,
× RELATED தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம்...