தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா 152 பெண்கள் உள்பட 232 பேர் கைது பட்டுக்கோட்டையில் சப் கலெக்டர் முன் விவசாயிகள் கூனி குறுகி நின்று போராட்டம்

பட்டுக்கோட்டை,பிப்.3: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பொன்னவராயன்கோட்டை வீரசேனன், தம்பிக்கோட்டை ராஜராமலிங்கம், பட்டுக்கோட்டை பக்கிரிசாமி, மதுக்கூர் சந்திரன், பள்ளத்தூர் கூத்தலிங்கம், சூரப்பள்ளம் கருணாகரன் ஆகியோர் பேசுகையில், இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயி என்கிறார்கள். ஆனால் விவசாயிகள் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் தொடங்கி நிவர், புரெவி, புயல், மழை வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றோம். தற்போது நாங்கள் எங்களது முதுகெலும்பு கூனி, குறுகி நின்று வருகின்றோம் என்றனர். அதனைத் தொடர்ந்து அதை வெளிப்படுத்தும்விதமாக சப்-கலெக்டர் முன் விவசாயிகள் அனைவரும் கூனி, குறுகி குனிந்தவாறு தமிழக அரசை கண்டித்தும், ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>