×

எஸ்டிபிஐ வலியுறுத்தல் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக விழா

பொன்னமராவதி, பிப். 3: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக விழா நடந்தது. திருச்சி டிஐஜி ஆனி விஜயா தலைமை வகித்தார். புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கிராம விழிப்புணர்வு காவலர் சித்ராவை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கியதுடன் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து மத்திய மண்டல ஐஜி ஜெயராம் பேசுகையில், பொதுமக்களிடம் அன்பாக பேசுவது தான் காவல்துறை. பழங்காலத்தில் கிராம மக்களை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டனர். நகரத்தை விட கிராமம் தான் முக்கியம். தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்காவை யாராவது புலக்கத்தில் விட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். கிராம விழிப்புணர்வு காவலராக நியமிக்கப்பட்டுள்ள சித்ராவிடம் இப்பகுதி பொதுமக்கள், தங்களது குறைகளை தெரிவிக்கலாம். முன்பு போல காவல்துறை அடித்து பயமுறுத்துவதில்லை. இப்போது போலீஸ், பொதுமக்களின் நண்பராகவே உள்ளது. பணத்துக்காக கொலை செய்வதை ஏற்று கொல்ல முடியாது. மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாவலர்களாகவே போலீஸ் உள்ளது என்றார். இதைதொடர்ந்து 1098 சைல்டுலைன் புன்னகை தேடி விழிப்புணர்வு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன், முன்னாள் பேருராட்சி கவுன்சிலர் ராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் சோலையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக ஏடிஎஸ்பி கீதா வரவேற்றார். பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...