×

தனி தொகுதிக்கு அதிமுக-டிடிவி குஸ்தி

 

அதிமுக, பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம், ஜாண்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜ, அமமுக ஆகியவை தென்மாவட்டங்களில் அதிக இடங்களை கேட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதியான ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளருக்கு வேண்டும் என கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

அதிமுகவினரும் இந்த தொகுதியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அக்கட்சியின் சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ மோகன், மாநில அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, கருங்குளம் யூனியன் முன்னாள் சேர்மன் டாக்டர் கோசல்ராம்ராஜா, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யனடைப்பு ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவில்பட்டி கவியரசன், தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி முனியசாமி உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமைப்புச் செயலாளர் சின்னத்துரைக்கு சீட் கொடுக்கக் கூடாது என இரு மாவட்டச் செயலாளர்களும் (எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜூ) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ, முன்னாள் எம்எல்ஏ மோகனுக்கு சீட் கேட்டு வருகிறார். அதேநேரத்தில் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து எந்த கோஷ்டி அரசியலும் செய்யாமல் உள்ள கோசல்ராம் ராஜா பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவினர் இடையே ஓட்டப்பிடாரம் தொகுதிக்காக முட்டல் மோதல் ஏற்பட்டு உள்ளதால் இத்தொகுதியை கூட்டணிக்கு தள்ளிவிடும் எண்ணத்தில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது.

* யாரு பக்கம் தாவுறது?

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய அமைப்புசெயலாளர் ராமு தோல்வி அடைந்தார். இப்போது, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிகிறது. பிரசாரம் செய்யும் விதமாக சுப நிகழ்ச்சி, கோயில் நிகழ்ச்சி, காது குத்து நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக முன்வந்து கலந்து கொண்டு வருகிறார். செல்லும் நிகழ்ச்சி அனைத்துக்கும் பணத்தை அள்ளி வீசி வருகிறாராம். கட்சி தலைமை அறிவிப்புக்கு முன்னதாகவே களத்தில் குதிச்சிட்டாராம்.

இதனால சொந்த கட்சிக்காரங்களே அதிருப்தியில மூழ்கியிருக்குறாங்களாம். சிலபேரு, ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு, இந்த முறையும் காட்பாடி, வேலூர் தொகுதின்னு 2 தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளாராம். இதனால, யாருக்கு சீட்டு கிடைக்கும், நாம யாரு பக்கம் தாவுவதுன்னு தெரியலையேன்னு சொந்த கட்சிக்காரங்களே குழப்பத்துல இருக்காங்களாம். கூட்டணி கட்சியான அமமுக, பாமகவையும் களத்துல இருக்கறதாகவே கண்டுக்கலையாம். கட்சிக்குள்ளவே அலப்பறை தொடங்கிடுச்சாம்.

Tags : ITMUKA ,BAJA ,Dhinakaran ,Amuka ,Anbumani ,Bamaka ,Jehan Murthy ,Revolution Bharatam ,Janbandyan ,Tamil People's Progress Club ,New Judiciary ,Bajah ,Ammuka ,Adimuka ,
× RELATED சொல்லிட்டாங்க…