×

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணத்தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இலுப்பூர், பிப். 3: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு இலுப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். விடுபடாமல் அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கெடுக்க வேண்டும். காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலுப்பூர் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமையன் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் அருனோதயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சுப்பையா, விவசாயிகள் சங்க ஒன்றிய துணை செயலாளர் ஜோசி, ரங்கராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் பொன்னுசாமி நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பீமராஜ், சுப்பிரமணியன், ரகுபதி, பழனிச்சாமி, சின்னப்பன், தங்கராஜ், தேவராஜ். சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...