குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 கேட்டு புதுகையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப். 3: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக்கோரி புதுகையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத கால நிலுவைத்தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துவகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>