×

புதுகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப். 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் 64 பணியிடங்களை பார்க்கும் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையர் தலையிட்டு துணை தாசில்தார்கள் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுகையில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் சிவகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோனைகருப்பையா நன்றி கூறினார்.

Tags : Revenue officials ,inauguration ,
× RELATED தஞ்சையில் களோக்கோ கால்பந்து கழக...