×

அதிமுக என்பது ஒரு கட்சியே இல்லை; வெளிநாட்டு தமிழர்களும் விஜய்க்கு வாக்களிப்பார்கள்: செங்கோட்டையன் பேட்டி

கோபி: அதிமுக என்பது ஒரு கட்சியே இல்லை, என தவெக தலைமை ஒருகிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வரலாற்றில் 2026ம் ஆண்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வர உள்ளனர். ஏழை மக்கள் 100 நாள் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் சூழல் இருக்கக்கூடிய காலத்தில், ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது, ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க முடியாத நிலை உள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, ஒவ்வொருவருக்கும் ஒரு இல்லம் அமைத்து தர, இரு சக்கர வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனம் பெற்றுத்தர, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எதிர்காலத்தில் இதெல்லாம் நிறைவேற்ற போவதாக கூறி இருக்கிறார். தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு முதலமைச்சராக இருந்தவர் அங்கு செல்லவில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எதிரி. அதிமுக என்பது என்.டி.ஏ கூட்டணி என்பது 10 கட்சியில் ஒன்று. அதிமுக என்பது கட்சியே இல்லை. கூட்டணி தொடர்பாக நல்லதே நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் போக போக தான் கூட்டணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பது தெரியும். குறுகிய காலத்தில் அங்கு கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் இங்கு வருவார்கள் என்றார்.

Tags : AIADMK ,Tamils ,Vijay ,Sengottaiyan ,Gopi ,Thaveka ,Chief Coordinator ,K.A. Sengottaiyan ,Gopi, Erode district ,Tamil Nadu Victory Party ,Tamil Nadu… ,
× RELATED சொல்லிட்டாங்க…