×

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்

பெரம்பலூர்,பிப்.3: தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூர் புதுபஸ்டாண் டு வடபுறம் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட நெல், வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் முழுமையாக வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்கிட வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெரம்பலூருக்கு முதல்வர் வருகை தந்தபோது பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கப்படுமென அறிவித்தபடி விரைந்து வழங்கிட வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்திடவும், பால் லிட்டருக்கு ரூ.40 விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்டங்களையும் ரத்து செய்திட வேண்டும்.

தொடர் வறட்சி மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள வேளாண் கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும்.
விவசாய மின் இணைப்பு கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். தோட்டக்கலை மின்இணைப்பு பெற்று கட்டணம் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா