விவசாயிகள் வலியுறுத்தல் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 4 கிரீசலைட்டர்கள் உடைந்ததால் சர்க்கரை பாகு நீரில் மிதக்கிறது ரூ.8.75 லட்சம் மூலப்பொருள் சேதம்

பெரம்பலூர், பிப்.3: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சர்க்கரைப் பாகு கொண்டு செல்லும் 4 கிரீசலைட்டர் கள் உடைந்து விபத்து. ரூ 8.75லட்சம் மதிப்புடைய, 500 மூட்டை சர்க்கரை தயாரிக் கக்கூடிய பாகு தண்ணீரில் கலந்து ஆலையில் மிதக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள ஜவஹர் லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் 2020-2021ம் ஆண்டுக்கான 43 வது அரவைப்பருவம் கடந்த டிசம்பர் 28ம்தேதி தொடங்கியது. இந்த சர்க்கரை ஆலை க்காக பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து 7,203 ஏக்கரில் பயிரிடப்பட்டு பதிவுசெய்யப்பட்ட 2 லட்சத்து, 10,000டன் கரும்பு கள் அரவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2500 டன்னு க்குமேல் அரைத்து வந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில், ஆலையில் கரும்புப் பாகினைக் கொண்டுசெல்லப் பயன்படும் எஸ்எல்ஆர் எனப்படும் மொத்தமுள்ள 16 கிரீசலைட்டர்கள்களில் 11,12,13,14 ஆகிய எண்கள் கொண்ட 4 கிரீசலைட்டர்கள் உடைந்து கீழேவுள்ள, இங்சக்க்ஷன் பேனலில் விழுந்ததால் பேனலும் உடைந்துள்ளது. இதனால் கிரீசலைட்டர்களில் வந்துகொண்டிருந்த (ஏ1)சர்க்கரை பாகு இங்சக்ஷன் பேனலில் ஓடிய, சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீருடன் கலந்து, கரைந்து தரைதளத்தில் வீணாக ஓடியுள்ளது.

4 கிரீசலைட்டர்கள் மூலம் 500 மூட்டை சர்க்கரை தயாரிக்கப் பயன்படும் கரும்பு பாகு, அதாவது சர்க்கரை ஒருகிலோ ரூ.35என்றால் கூட ரூ.8.75லட்சம் மதிப்பில் சர்க்கரை தயாரிக்கக் கூடி ய சர்க்கரைப் பாகு தண்ணீ ரில் கலந்து தரையில் கொ ட்டி, ஆலைக்குள் வெள்ளம் புகுந்தது போல் தண்ணீராய்த் தேங்கி நிற்கிறது. இத னால் சகதிபோல் காணப்படுவதோடு சர்க்கரைப் பாகின் வாசத்திற்கு பூச்சிகள், வண்டுகள், மொய்க்க த் தொடங்கி விட்டன. இதனால் உடைந்த பாகங்களை சரி செய்வதோடு மட்டு மன்றி ஆலையைக் கழுவி சுத்தப் படுத்த வேண்டிய தும் அவசிய மாகிவிட்டது.

இதுகுறித்து பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் செந்துறை ஞானமூர்த்தி தெரிவித்ததாவது : ஆலையில் உள்ள உந்த எந்திரங்கள் 1977 மற்றும் 1990ல் பொறுத்தப்பட்டது. எனவே இவற்றை புதுப்பி க்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையில்லை. இந்த பகுதியில் இயங்கும் 7,8 மின்விசிறிகள் பலகீனமாக உள்ளது. அதை மாற்ற வே ண்டும் எனப் பலமுறை சொல்லியும் இதுவரை மாற்றப்படவில்லை. அதி காரிகளின் கவனக்குறை வால் இந்தவிபத்து நடந்தி ருக்கிறது.இதை சரிசெய்ய இன்னும் 2வார காலம் ஆகு ம். உடனடியாக அதிகாரி கள் தலையிட்டு ஆலையை புணரமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: