×

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை, பிப். 3: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், சத்துணவு மாவட்ட செயலாளர் கமலநாதன், மின்வாரிய ஓய்வூதிய சங்கம் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினர். மாவட்ட தலைவர் பழனிவேல் பேசுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். அனைத்துவகை ஓய்வூதியர்களுக்கும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

தர்ணா போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், கருணாநிதி, ராமபத்திரன், ராமதாஸ், மாவட்ட இணை செயலாளர்கள் ஜெகத்ரட்சகன், திருஞானசம்பந்தம், கோவிந்தராஜன் மற்றும் வேம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.
நாகை: நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராசன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் காதர் மொஹிதீன் முன்னிலை வகித்தார்.  மாநில துணைத்தலைவர் குப்பன், மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

Tags : All Sector Pensioners' Union ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...