வேதாரண்யத்தில் அப்சி டயர்ஸ் அண்ட் அலாய்மெண்ட் ஷோரூம் திறப்பு விழா

வேதாரண்யம், பிப். 3: வேதாரண்யம் தோப்புத்துறை சாலையில் அப்சி டயர்ஸ் அண்ட் அலாய்மெண்ட் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று ஷோரூமை திறந்து வைத்தார். அப்சி குழும நிர்வாகி அப்சர் உசேன் வரவேற்றார். மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன், வேதாரண்யம் நிலவள வங்கி தலைவர் பிவிகே பிரபு, வேதாரண்யம் வணிகர் சங்க தலைவர் திருமலை செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன் அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகராசு, அதிமுக நகர செயலாளர் நமச்சிவாயம், நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு, அகரம் பள்ளி நிர்வாகி பிவிஆர் விவேக், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், தோப்புத்துறை ஷாபி, முன்னாள் எம்எல்ஏ எஸ்கே.வேதரத்தினம், தொழிலதிபர் சண்முகம், திமுக நகர செயலாளர் புகழேந்தி, நாகை தொழிலதிபர் ராமசாமி, காங்கிரஸ் பிரமுகர் ரகமதுல்லா, தோப்புத்துறை தொழிலதிபர் ரபீக், பிரித்விராஜ், ஜெயின் வணிகர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், தோப்புத்துறை தமீம் மற்றும் அப்சி குழும ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>