தில்லையாடி ரேஷன் கடையில் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தரங்கம்பாடி, பிப். 3 :தரங்கம்பாடி அடுத்த தில்லையாடி கிராமத்தில் 1,100 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கு ஒரு பெண் பணியாளர் உள்ளார். இந்த ரேஷன் கடையில் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. மற்ற 2 நாட்கள் அந்த பெண் பணியாளருக்கு தில்லையாடியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூதனூர் கிராம ரேஷன் கடைக்கு கூடுதல் பணியாக நியமிக்கப்பட்டு இருப்பதால் அங்கு சென்று விடுகிறார். எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 நாட்கள் பொருட்கள் வழங்க தில்லையாடி ரேஷன் கடை பணியாளருக்கு மாற்றுப்பணி வழங்கக்கூடாது. ரேஷன் கடையில் 6 நாட்களும் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>