×

க.பரமத்தி பகுதியில் கடும் பனிப்பொழிவுகளில் கருகும் சோளப்பயிர்கள் விவசாயிகள் கவலை

க.பரமத்தி, பிப்.3: க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் கடும் பனி பொழிவால், சோளப்பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் மானாவாரியாகவும், கிணற்று பாசனத்தின் வாயிலாகவும் சோளம் விதைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.18ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் நிலங்களில் அளவிற்கு அதிகமாக களைகள் மண்டியது. இதனை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வரும் வேளையில், கடும் பனி பொழிவு நிலவுகிறது. இதனால் சோளம் தாக்குப் பிடிக்காமல் அறுவடை நெருங்கிய நேரத்தில் கருக தொடங்கியுள்ளது. அறுவடை செய்யும் நேரத்தில் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு