தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை

கரூர், பிப். 3: பக்தர்களின் நலன் கருதி தாந்தோணிமலை பெருமாள் கோயில் பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கரூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலின் தென்புற பகுதியின் எதிரே பயனற்ற நிலையில் சின்டெக்ஸ் டேங்க் உள்ளது. தற்போது வெயில் காலம் துவங்க உள்ள நிலையில் பக்தர்கள் நலன் கருதி புதிதாக கோயில் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>