×

கரூர் வெள்ளாளப்பட்டியில் ரூ.4.72 கோடி மதிப்பில் கட்டப்பட்ட துணை மின்நிலையம் திறப்பு விழா

கரூர், பிப்.3: கரூர் நகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டியில் ரூ.472.85 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட துணை மின்நிலைய திறப்பு விழா நடைபெற்றது. கரூர் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 7 கி.மீ அப்பால் புலியூர் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், தொழிற்பேட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளான தொழிற்பேட்டை, செல்வம் நகர், டீச்சர் காலனி, சணப்பிரட்டி, வடக்குப்பாளையம், மேலப்பாளையம், நரிகட்டியூர் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதால் தொழிற்சாலை உபகரணங்களும், விவசாய மோட்டார்களும் மற்றும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள மோட்டார்களும் பழுதடைவதால் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், எஸ்.வெள்ளாளப்பட்டியில் ரூ.472.485 மதிப்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, புதிய துணை மின்நிலைய பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.இதன் காரணமாக, தொழிற்பேட்டை மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள 15 குக்கிராமங்கள் பயன்பெறும். தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழில்நிறுவனங்களும், தொழில் வளர்ச்சிக்கும் இந்த துணை மின்நிலையம் பயனுள்ளதாக இருக்கும். நிகழ்ச்சியில் திருச்சி மின்வாரிய தலைமை பொறியாளர் வளர்மதி, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karur Vellalapatti ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்