சென்னையில் நடந்த குத்து சண்டை போட்டியில் கரூர் மாணவர் சாதனை

கரூர், பிப்.3: சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் மூன்றாமிடம் பிடித்தார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் அனுமதியுடன் சென்னையில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 54-60 கிலோ எடைபிரிவில், கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் குகன்குமார் என்பவர் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவரை, கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் பாராட்டினர்.

Related Stories:

>