×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கம் தர்ணா போராட்டம்

கரூர், பிப். 3: 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஒய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயவேல் வரவேற்றார். நிர்வாகிகள் மோகன், சண்முகம், ஜீவானந்தம், தனபாக்கியம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். பிற சங்க நிர்வாகிகளான சுப்பிரமணியன், செல்வராணி, சக்திவேல், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர். மாவட்ட பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.
முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். கமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : protest ,Pensioners' Association Dharna ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!