தேசிய குழந்தைகள் மாநாட்டுக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு

கரூர், பிப். 3: ஆய்வறிக்கைகள் மூலம் 28வது தேசிய குழந்தைகள் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கலெக்டர் மலர்விழி பாராட்டினார். மத்திய தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றான குழந்தைகளுக்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம் சார்பில் 2300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாவட்ட அளவில் சிறப்பான அளவில் ஆய்வறிக்கை சமர்ப்பித்த 57 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டன. கரூர் மாவட்டத்திலிருந்து கரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தபவஸ்னி உட்பட தனியார் பள்ளி மாணவ, மாணவிகளும் தேசிய அளவில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும், கலெக்டர் மலர்விழி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories:

>