அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் போலீசிடம் மன்னிப்பு

திங்கள்சந்தை, பிப்.3 : சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நகை வியாபாரி வீட்டில் புகுந்த வட மாநில கொள்ளை கும்பல் தாய், மகனை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து நகைகளையும் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட போலீசார் கொள்ளையன் ஒருவனை என்கவுன்டர் செய்ததோடு மேலும் 3 கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ெகாள்ளை கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.  குமரி மாவட்டம் இரணியல் அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்த நிர்மல் என்பவர் வெளியிட்டு இருந்த வீடியோ பதிவில், வெட்டு கத்தி கொண்டு தென்னை மட்டையை  வெட்டி விட்டு, இதே போல் கொள்ளையர்களை துண்டு, துண்டாக வெட்ட வேண்டும்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை செயல்படுத்த வேண்டும் என கூறி இருந்தார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கையில் வெட்டரிவாளுடன் வீடியோ வெளியிட்ட நிர்மலை  இரணியல் போலீசார் தேட தொடங்கினர். இதனால் அவர் தனது வீட்டில் இருந்து மாயம் ஆனார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நிர்மல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளார். தாய், மகன் ெகால்லப்பட்ட செய்தியை படித்த உணர்ச்சி வேகத்தில், வீட்டில் தேங்காய் வெட்ட வாங்கி வைத்திருந்த அரிவாளை வைத்து வீடியோ போட்டு விட்டேன். இது மிகப்பெரிய தவறு. காவல்துறைக்கு, நீதித்துறைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். சாதாரண கட்டிட தொழிலாளி நான் சொல்ல வேண்டியதில்லை. தவறு செய்து விட்டேன். நான் வேலைக்கு போக வேண்டும். காவல்துறை, நீதித்துறை என்னை மன்னிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories:

>