×

சிவகாசியில் குப்பைகள் எரிப்பால் மூச்சு திணறல் பாதிப்பு

சிவகாசி, பிப். 3:  சிவகாசி நகராட்சிக்குட்பட்ட விசாலாட்சி நகர், நேசனல் காலனி, காரனேசன் காலனி பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை ரோட்ரோம் நகராட்சி ஊழியர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் எப்போதும் புகை மண்டலமாகவே உள்ளது. அருகில் பெண்கள்  கல்லூரி உள்ளதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தவிர குப்பை கழிவுகள் எரிந்து கொண்டே இருப்பதால் கல்லூரி வாளகத்திற்குள் புகை பரவி மாணவிகளுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இச்சாலை வழியாக வாகனங்களில் கடந்து செல்வோரும புகை மண்டலத்தால் முகத்தை மூடி கொண்டு செல்லும் அவலம் உள்ளது.
 
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பை வரியை முறையாக செலுத்தி வருகின்றனர். ஆனாலும் நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் வாறுகால், குப்பை கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. மேலும் குப்பை கழிவுகளில் இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சிவகாசி நேசனல் காலனி பகுதியில்   குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags : burning ,Sivakasi ,
× RELATED ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு...