தேவாரத்தில் குடிநீர் பைப் லைன் உடைப்பு

தேவாரம், பிப்.3:  தேவாரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு, கோம்பை,பண்ணைபுரம், தேவாரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் நடக்கிறது. பூமிக்கடியில் பைப் லைன்  பதிக்கப்பட்டு, தேவாரம் பேரூராட்சியில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள, பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், தேவாரத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் வழங்கும் பணி நடக்கவில்லை. தேவாரம் பேரூராட்சிக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் பைப் உடைப்பு மற்றும் பம்பிங் ஸ்டேசன் பழுது  சரிசெய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories: